பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் நேர்முக உதவியாளரிடம் தொடர்பில் இருந்தவர்கள் நிம்மதி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனாவின் பிடியில் சிக்கிய உயர் கல்வித்துறை அமைச்சரின், நேர்முக உதவியாளரிடம் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை முடிவில் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருபவர் தர்மபுரியை சேர்ந்த, 45 வயது தாசில்தார். அவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சென்று வந்த அரசு அலுவலகங்கள் மற்றும் கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆளும் அரசியல் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பிரமுகர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, முடிவு வெளியானதை அடுத்து, நேர்முக உதவியாளிடம் தொடர்பில் இருந்து அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் நிம்மதியடைந்துள்ளனர். ஆனாலும், அமைச்சரின் நேர்முக உதவியாளர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X