இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
கிருஷ்ணகிரி: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மா மற்றும் காய்கறிகள் பயிர் செய்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்க மாநில பொருளாளர் ரங்கசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மா மற்றும் காய்கறிகள் பயிர் செய்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்க மாநில பொருளாளர் ரங்கசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் மா விளைச்சல், 60 சதவீதம் பாதிக்கப்பட்டது. 40 சதவீத மா விளைச்சல் அடைந்தபோது, சூறாவளிக்காற்று, ஆலங்கட்டி மழையால், 50 சதவீதம் சேதமாகி விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பீடு ஏற்பட்டது. இதேபோல் காய்கறிகள், கீரை சாகுபடி விவசாயிகளுக்கு ஊரடங்கால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மா, காய்கறிகள் மற்றும் கீரை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X