பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 27 கிராம ஊராட்சிகளில் தீவிரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், 27 கிராம ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மண்டல அலுவலர் சாந்தா பார்வையிட்டார். 27 கிராம ஊராட்சிகளிலும், அரசு அலுவலக கட்டடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, வணிக வளாகங்கள், பயணியர் நிழற்கூடங்கள், பஸ் ஸ்டாண்ட், வங்கிகள், ஏ.டி.எம்.,கள் மற்றும் பொது வினியோக கட்டடம் ஆகியவற்றின் முன், கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. மேலும், தெருக்கள்தோறும் பிளீச்சிங் மற்றும் சுண்ணாம்புத்தூள் கலவை தூவப்பட்டன. மக்கள் வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் போது, கைகளை கழுவ, 27 கிராம ஊராட்சிகளில் தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், குந்தாரப்பள்ளி, மாதேப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடி வைக்கவும், தண்ணீர் தொட்டிகளை வாரத்துக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவும், தண்ணீர் தேங்கும் டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்களை உடனே அப்புறப்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சுபாராணி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் முகிலன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X