பொது செய்தி

தமிழ்நாடு

160 மி.மீ., மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும், 160 மி.மீ., மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 20 நாட்களாக மழை இல்லை. கடந்த, மூன்று நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 160.40 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மற்றும் தளியில் தலா, 30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே போல், தேன்கனிக்கோட்டை, 25 மி.மீ., சூளகிரி, 23, பாரூர், 18, போச்சம்பள்ளி, 15.40, நெடுங்கல், 10.20, ஓசூர், 7, ஊத்தங்கரை, 1.60 மி.மீ., மழை என மாவட்டம் முழுவதும், 160.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, நேற்று முன்தினம், 92 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், பரவலாக மழை பெய்துள்ளதால் நேற்று அணைக்கு நீர்வரத்து, 176 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 148 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 28.90 அடியாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக கே.ஆர்.பி., அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்ததால், பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரமான, 15.60 அடியில், நேற்று, 13.80 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று பாரூர் ஏரிக்கு நீர்வரத்து ஏதும் இல்லாத நிலையில், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X