பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் தணிக்கை இல்லை: தடையின்றி சென்று வரும் வாகனங்கள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடாததால், அனைத்து வாகனங்களும் தடையின்றி வந்து சென்றன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம், கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கலெக்டர்கள், வாகன போக்குவரத்தில் மண்டல முறை அமலில் உள்ளதால், பிற மாவட்டங்களில் இருந்து, இ- பாஸ் இன்றி வருவோரால் நோய்த்தொற்று பரவுகிறது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. எனவே, மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்க வேண்டும். வேறு மாவட்டங்களில் இருந்து வருவோர், இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள், இ- பாஸ் பெற வேண்டும் என தெரிவித்தனர். அதன்படி நேற்று, மாவட்ட எல்லைகள் முழுவதும், 'சீல்' வைத்து, எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில், போலீசார் தணிக்கை மேற்கொள்ளவில்லை. ??மேலும், கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி வந்து சென்றன. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பஸ்கள் இயக்காததால், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குறைந்து காணப்பட்டனர். டவுன் பஸ்கள் மட்டும் வழக்கமாக இயங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X