பொது செய்தி

தமிழ்நாடு

9 பேருக்கு கொரோனா: தனியார் ஆய்வகத்துக்கு 'சீல்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சிட்கோ வளாகத்தில், 'நாவல் லேபரட்டரி' என்ற தனியார் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் நேற்று, ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் விவேக், டாக்டர் திலக் ஆகியோர் முன்னிலையில் ஆய்வகத்திற்கு நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.* இதேபோல், ராயக்கோட்டை கூட்ரோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டில், பூ, தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக, கடந்த சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். நேற்று, தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்ட ஒரு கடையில் மீண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக இருந்தது தெரிய வந்தது. அதில், பலர் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்தனர். இதையடுத்து, அந்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X