பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா உறுதி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள எஸ்.மோட்டூரை சேர்ந்த, 30, வயது ஆண், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த, 19ல் ஊருக்கு வந்த அவருக்கு, நேற்று கொரோனா உறுதியானது. ஓசூர், அண்ணாநகரை சேர்ந்த, 28, வயது ஆண், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வாகனம் ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, 31, வயது ஆணுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. ஓசூர் கர்னூலை சேர்ந்த, 32, வயது ஆண் மற்றும் அவரது, ஐந்து வயது மகள் ஆகியோர், ஆந்திர மாநிலம் சென்று வந்தனர். இவர்களது கீழ்வீட்டில் வசிக்கும், 23, வயதுப்பெண், கள்ளக்குறிச்சி சென்று வந்தார். இவர்கள் மூவருக்கும், கொரோனா உறுதியானது. ஓசூர், லட்சுமிதேவி நகரில் வசிக்கும், தர்மபுரியை சேர்ந்த, 25, 24, 27, 23, 25, வயது ஆண்கள் ஐந்து பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓசூர், என்.டி.ஆர்., நகரை சேர்ந்த, 24, வயது ஆண், தூத்துக்குடி சென்று வந்தார். ஓசூர், கே.சி.சி., நகரை சேர்ந்த, 40, வயது ஆண் திருச்சி சென்று வந்தார். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X