பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 21க்குள் 5,531 பேருக்கு கொரோனா பாதிக்கும்: கிருஷ்ணகிரியில் மருத்துவத்துறை ஆய்வறிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வரும் ஆக., 21க்குள், 5,531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என, மருத்துவத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 16 முதல், 21 வரையிலான ஆறு நாட்களில், 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர். கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில், ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருமண மண்டபங்களில் வழக்கமான கூட்டத்துடன், திருமணங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருமணத்துக்கு, 50 பேரும், துக்க நிகழ்ச்சியில், 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற, அரசின் உத்தரவு காற்றில் பறக்கிறது. பல திருமண மண்டபங்களில், 100க்கும் மேற்பட்?டோர் ஒன்றுகூடி, வழக்கம் போல் திருமணத்தை நடத்துகின்றனர். இதற்காக, வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்தும், உறவினர்கள் வந்து செல்கின்றனர். சூளகிரியில் நடந்த தலைமை ஆசிரியையின் வீட்டு திருமணத்துக்கு சென்று வந்ததால், பலருக்கு கொரோனா பரவியது. பெங்களூருவில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு, பர்கூர் வந்து சென்ற மூதாட்டியால், ஒரு கிராமத்தில், 11 பேருக்கு கொரோனா பரவியது. இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போதுள்ளது போல், தொற்று பரவினால் வரும் ஆக.,21க்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என, மருத்துவத்துறை ஆய்வறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இது, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாகி வருகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் கூறுகையில், ''தற்போதுள்ள சூழ்நிலையை வைத்து, கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என, மருத்துவத்துறை சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதுதான் தற்போது 'வாட்ஸ் ஆப்'பில் வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X