சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாமி சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஓசூர்: உத்தனப்பள்ளியில், சுவாமி சிலைகளை உடைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில், போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே பைரப்பா மலையில், சிவன் கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால், கோவிலில் பூஜைகள் மட்டும் நடக்கிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த, 22 காலை, கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி சென்றார். அப்போது, கோவிலில் இருந்த நந்தி, லிங்கம் மற்றும் மேலும் சில சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக, உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுவாமி சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறி, அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில், மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் மணி, அமைப்பு செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், உத்தனப்பள்ளி இன்ஸ்பெக்டர் கமலே சனிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X