இருசக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகள் உள்பட 3 பேர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனங்கள் மோதல்: தந்தை, மகள் உள்பட 3 பேர் சாவு

Added : ஜூன் 26, 2020
Share

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, நடந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த போடனூரை சேர்ந்தவர் பிரகாஷ், 35. கூலித்தொழிலாளி; இவர், தன் மனைவி ஜீவா, 27, ஆறு வயது மகள், மூன்று வயது மகன் ஆகியோருடன், பஜாஜ் பாக்ஸர் இருசக்கர வாகனத்தில், போடனூரிலிருந்து குன்னத்தூர் சென்று விட்டு நேற்று முன்தினம் மதியம், 2:20 மணிக்கு போடனூர் திருப்பினார். அப்போது, சின்ன குன்னத்தூர் மன்னார்குடி பஸ் நிறுத்தம் அருகே, எதிரே பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த, சின்ன குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல், 20, பிரகாஷின் வாகனம் மீது மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார். படுகாயமடைந்த பிரகாஷ், ஜீவா மற்றும் குழந்தைகள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, பிரகாஷ் மற்றும் ஆறு வயது மகள் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். விபத்து குறித்து, ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X