சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி கணவன், மனைவி பலி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி யூனியன், இச்சிப்பாளையம், அரிஜனகாலனியை சேர்ந்தவர் பெருமாள், 45, கட்டட மேஸ்திரி. இவர் மனைவி அமுதா, 40. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருப்பூர் மாவட்டம், வளையபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ஹீரோ ?ஹாண்டா பைக்கில் சென்றனர். அப்போது மழையில் நனைந்தபடி, கொடுமுடி ஒத்தக்கடை அருகேயுள்ள பெருமாள் கோவில் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், பெருமாள், அமுதா இருவரும் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். கொடுமுடி போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X