ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு இடையே படகு போக்குவரத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு இடையே படகு போக்குவரத்து நிறுத்தம்

Added : ஜூன் 26, 2020
Share

அம்மாபேட்டை: ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு இடையே, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, சேலம் மாவட்டம், பூலாம்பட்டி செல்வதற்காக, படகு போக்குவரத்து செயல்பட்டு வந்தது. ஊரடங்கால் தடை செய்யப்பட்டது. இதனால், 15 கி,மீ., தூரம் சுற்றி செல்லும் நிலை, அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள், மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து, நெருஞ்சிப்பேட்டை மற்றும் பூலாம்பட்டி இடையிலான படகு போக்குவரத்து நீண்ட நாட்களுக்கு பிறகு துவங்கியது. அதற்குள், சில நாட்களிலேயே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால், வெளிமாவட்டங்களுக்கு சென்று வர, இ - பாஸ் கட்டாயம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வரும், 30 வரை, ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, படகுகள் கரையோரங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இது இரண்டாவது முறையாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X