தமிழ்நாடு

புஞ்சை புகளூரில் ரூ.406.50 கோடியில் கதவணை: அரசாணை வெளியீடு

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

கரூர்: புஞ்சை புகளூர் பகுதி காவிரியாற்றில், கதவணை கட்ட, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, புஞ்சை புகளூர் பகுதி காவிரியாற்றில், கதவணை கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இதன்படி, ஆற்றின் குறுக்கே, 1,140 மீட்டர் நீளம், மூன்று மீட்டர் உயரத்திற்கு கதவணை அமைக்கப்படவுள்ளது. இதில், 12 மீ., நீளம், 2.5 மீ., உயரம் கொண்ட மதகுகள் ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் நபார்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்திலிருந்து, கரூர் மாவட்டம் கட்டளை வரை, காவிரி ஆற்றில் பாசன வாய்க்கால்களுக்கு முறையாக நீர் வழங்க கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என, வாங்கல், மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், மேட்டூர் அணையில் இருந்து, 107 கி.மீ., தொலைவில் புஞ்சை புகளூரில் கதவணை அமைக்கப்படுகிறது. இந்த கதவணை, 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இதன்மூலம், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். மேலும், 4,041 ஏக்கர் பாசன வசதி பெறும். கட்டுமான பணிக்கு, நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியிடம் விண்ணப்பிக்க, தமிழக நீர்வள பாதுகாப்பு மற்றும் நதி மறுசீரமைப்பு கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202012:39:00 IST Report Abuse
  karthik மோகனூரில்தான் மணல் கொள்ளையே நடக்கிறது
Rate this:
Cancel
26-ஜூன்-202012:36:32 IST Report Abuse
  karthik காவேரியில் தடுப்பணை கட்டினால், மணல் கொள்ளை அடிக்க முடியாது. அதை தவிர வேற எங்கேயானாலும் ஓகே. அடுத்தது கூவம் நதியிலே பல ஆயிரம் கோடியில் தூர் வாருவாங்க
Rate this:
Cancel
26-ஜூன்-202012:28:13 IST Report Abuse
  karthik கமிஷன், கான்ட்ராக்ட், களவானி சக்கை போடு, போடு ராஜா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X