சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சென்னையில் ஒரே நாளில் 23 பேர் பலி

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை, கொரோனா, உயிரிழப்பு, மண்டலவாரியாக, ராயபுரம், பாதிப்பு, Covid-19 in tn, corona death, coronavirus death, covid-19 toll, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, royapuram

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், நேற்றுடன் (ஜூன் 25), 47 ஆயிரத்து, 650 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில், 27 ஆயிரத்து, 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்து, 969 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்பாராத விதமாக, 694 பேர் (1.47 சதவீதம்) பலியாகியுள்ளனர்.


சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு



latest tamil news



மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில், 6,951 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 5,717 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,534 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




ஒரே நாளில் 23 பேர் பலி



latest tamil news



சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் அடங்கும். இதனால் சென்னையில் பலியானோர் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூன்-202016:37:55 IST Report Abuse
Bhaskaran மூன்று கோடிபேரெல்லாம் கெடயாது
Rate this:
Cancel
Navinkumar - Seattle,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202012:29:12 IST Report Abuse
Navinkumar சென்னையில் மூன்று கோடி பேர் இருக்கின்றனர், அதுல இருபது மூன்று ஒன்றுமே இல்லை.. காரோண இல்லை என்றாலும் வரும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X