பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மாவட்டங்களில் மூன்றே நாளில் உச்சமடைந்த கொரோனா

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Tamil nadu Corona, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயர்வு, அதிகரிப்பு

சென்னை: தமிழக மாவட்டங்களில் இதுவரை இருந்த பாதிப்பை விட கடந்த 3 நாட்களில் மட்டும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 25) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 71 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக தொடர்ந்து சென்னை மட்டுமே அதிக பாதிப்பை பதிவு செய்து வந்தாலும், மற்ற சில மாவட்டங்களில் சமீப நாட்களாக அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.


latest tamil news


அதிலும் குறிப்பாக தேனி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இதுவரை பதிவான பாதிப்பு எண்ணிக்கையை விட 40 சதவீதத்திற்கும் மேல் கடந்த 3 நாட்களில் மட்டும் பதிவாகியுள்ளது.
தேனியில் ஜூன் 22ம் தேதி வரை 236 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, மூன்று நாட்களில் 85 சதவீதம் அதிகரித்து 437 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் 22ம் தேதி வரையில் தமிழகத்திலேயே குறைவான பாதிப்புடன் (37 பேர்) இருந்த நீலகிரியில் 3 நாளில் 50 (61 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவானது இதுவரை மதுரையில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதியளவாகும். மதுரையில் மொத்தம் 1,279 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். தருமரபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 46.87 சதவீதம் அளவிற்கு அதிகரித்து தற்போது 47 பேர் என்ற பாதிப்பு நிலையில் இருக்கிறது. இதுவே இப்போதைய சூழலில் தமிழகத்தில் மிக குறைவான பாதிப்புடைய மாவட்டமாகும்.


latest tamil news




மாவட்ட வாரியாக..


மாவட்டம் - கடந்த 3 நாளில் பாதிப்பு - அதன் சதவீதம்
அரியலூர் - 18 - 4.16%
செங்கல்பட்டு - 529 - 13.66%
சென்னை - 4898 - 11.45%
கோவை - 67 - 23.92%
கடலூர் - 89 - 10.81%
தருமபுரி - 15 - 46.87%
திண்டுக்கல் - 65 - 20.83%
ஈரோடு - 13 - 15.66%
கள்ளக்குறிச்சி - 75 - 18.98%
காஞ்சிபுரம் - 273 - 22.46%
கன்னியாகுமரி - 77 - 43.25%
கரூர் - 14 - 11.76%
கிருஷ்ணகிரி - 1 - 1.38%
மதுரை - 430 - 50.64%
நாகப்பட்டினம் - 15 - 6.84%
நாமக்கல் - 1 - 1.12%
நீலகிரி - 19 - 61.29%
பெரம்பலூர் - 16 - 10.59%
புதுக்கோட்டை - 16 - 18.60%
ராமநாதபுரம் - 157 - 49.52%
ராணிப்பேட்டை - 42 - 8%
சேலம் - 142 - 40.34%
சிவகங்கை - 32 - 31.06%
தென்காசி - 25 - 9.57%
தஞ்சாவூர் - 49 - 15.90%
தேனி - 201 - 85.16%
திருப்பத்தூர் - 18 - 21.68%
திருவள்ளூர் - 440 - 16.63%
திருவண்ணாமலை - 245 - 20.43%
திருவாரூர் - 46 - 19.91%
தூத்துக்குடி - 117 - 18.30%
திருநெல்வேலி - 45 - 6.98%
திருப்பூர் - 6. 4.91%
திருச்சி - 151 - 48.70%
வேலூர் - 159 - 32.38%
விழுப்புரம் - 89 - 14.68%
விருதுநகர் - 75 - 36.05%

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covim-20 - Soriyaar land,இந்தியா
26-ஜூன்-202020:08:26 IST Report Abuse
Covim-20 ஊரடங்கு தளர்வு... தளர்வு... என்று ஒரேயடியாக எல்லாவற்றையும் தளர்த்தியதால் வந்த விளைவு...
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
26-ஜூன்-202013:48:40 IST Report Abuse
Karthikeyan K Y மக்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல் பட வேண்டும். பொருளாதாரம், அன்றாட வாழ்வாதாரம் , அணைத்து குடும்ப ஜீவாதார நிலைமைகள் கண்டிப்பாக கவலைஅடைய செய்யற அதே வேலையில் உயிர் மிக முக்கியம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசும் அரசாங்கமும் செய்வதை எதிர்பார்ப்பதை விட மக்கள்தான் இதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எதிர் கட்சி விளம்பரத்திலும், ஆளும் கட்சி முயற்சிகளையும் அதிகாரிகள் தன்னிச்சையாகர் மற்றொரு முயற்சியினையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். சொல் போர், வார்த்தை போர், என்பதை அரசியல் காட்சிகள் விட்டுவிட்டு மக்களின் நலனை தமிழக காட்சிகள் செய்தார்களா என்றால் கட்சி காரர்கள் கோபித்து கொள்வார்கள்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
26-ஜூன்-202013:32:31 IST Report Abuse
Chandramoulli மக்கள் இந்த நோயின் வீரியத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இப்போது மக்களை விரட்டி விரட்டி அடிக்கிறது. தேவை இல்லாமல் வெளியே வராதீர்கள் என்ற அரசின் மற்றும் போலீஸ் அறிவுரையை எல்லோரும் காற்றில் பறக்க விட்டார்கள் . அனுபவித்தால் தான் நோயின் வலி என்ன அரசின் அறிவுரையை மதிக்காமல் ஊர் சுற்றியதின் விளைவு என்ன என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X