இந்தியாவை மிரட்டுது சீனா: மைக் பாம்பியோ சாடல்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
US, military shift, China's threat, china, India, Mike Pompeo, indian army, us army, இந்தியா, அமெரிக்கா, மைக் பாம்பியோ, சீன ராணுவம்,

வாஷிங்டன் : இந்தியா, மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சீன ராணுவத்தால் அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. இதனால், உலகளவில் தனது படைகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

'பிரஸ்ல்ஸ் போரம் 2020' என்ற மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மைக் பாம்பியோ பேசியதாவது: சில இடங்களில் அமெரிக்க படை பலத்தை குறைக்கவும் , சீன ராணுவத்தினால், அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தியா, மலேஷியா, வியட்னாம், இந்தோனேஷியா மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க , அங்கு அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்தி, அப்பகுதிகளை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.


latest tamil news


இதனால், அமெரிக்க படைபலம் குறைக்கப்படும் நாடுகள், தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான், புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில், சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைபலத்தை கூட்ட முடியும். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூன்-202019:34:41 IST Report Abuse
S. Narayanan இன்று உலகமே சீனாவுக்கு எதிராக உள்ளது. சீனாவினால் எதுவும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-ஜூன்-202017:12:09 IST Report Abuse
வெகுளி ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்து சீனாவிற்கு பாடம் புகட்ட வேண்டும்...
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
26-ஜூன்-202016:32:05 IST Report Abuse
Unmai vilambi இரு நாடுகளும் நம்பத்தகுந்தவை அல்ல .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X