கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு முழு முக கவசம்: ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
போலீசார், போலீஸ்,மாஸ்க், ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை, உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, உயர்நீதிமன்ற கிளை, ஐகோர்ட் கிளை, நீதிபதிகள், கையுறை, face shield, police personnel, Madurai court, Coronavirus, Corona, Covid-19, tamil nadu, corona crisis

மதுரை: தமிழகத்தில் போலீசார், கொரோனாவினால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு முழு முகத்தை மறைக்கும் மாஸ்க்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பில் முன்கள பணியாற்றுபவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 54.434 போலீசாருக்கு 54434 பேருக்கு முகத்தை மறைக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவு : தமிழகத்தில், அனைத்து போலீசாருக்கும் முழு முகத்தை மறைக்கும் முழு மாஸ்க் (பேஷ் ஷீல்ட்), கையுறை வழங்க வேண்டும். போலீசார் முழு முகக்கவசம் அணிவதை மாவட்ட எஸ்.பி.,க்கள் உறுதிப்படுத்த வேண்டும். போலீசாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து, நகராட்சி, பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியாளர்கள் மாஸ்க், கையுறை அணிந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.


ஆயிரம் போலீசாருக்கு கொரோனா


latest tamil news


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் 1,005 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 410 போலீசார் குணமடைந்து பணிக்கு திரும்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
26-ஜூன்-202021:09:54 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இதுஎந்த சட்டப்பிரிவில் வருகிறதோ. கோர்ட் சொல்லித்தான் தெரியனும் போல் உள்ளது. நிர்வாக படிப்புபடித்து ஆள்பவர்களுக்கு இது தெரியாதோ கோர்ட் சொல்லுது. வாய்தா போட்டு போட்டு காலம் ஓட்டாமல் வழக்கை சரியாக நேர்மையாக தைரியமாக முடித்தால் பாராட்டலாம். அதைவிட்டு அரசை சீண்டிக்கிட்டு ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X