பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு முகக்கவசமே மருந்து; பிரதமர்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசம், சமூக இடைவெளியுமே மருந்து என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



latest tamil news




உ.பி.,யில் உள்ளூர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், உள்ளூர் மக்களுக்கு, தொழில் அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் உருவாக்கப்பட்ட ''ஆத்ம நிர்பார் உத்தர பிரதேஷ் ரோஜ்கர் அபியான்'' என்ற திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து, 6 மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது : தற்போது வரை கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால், அந்த வைரசில் இருந்து தப்பிக்க, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் 6 அடி தூரம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.


latest tamil news


பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் உலகை ஆட்சி செய்தன. பலமிக்க நாடுகளாக இருந்தன. இந்த நாடுகளின் மொத்தம் 24 கோடி பேர் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் உ.பி.,யில் மட்டும் 24 கோடி பேர் உள்ளனர். இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனாவுக்கு 1,30,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், உ.பி.,யில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி., அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மரணம் என்பது மரணம் தான். இந்தியாவானாலும், உலக நாடுகளிலும் எந்த ஒரு உயிரிழப்பும் கவலைப்பட வேண்டிய விஷயம் தான் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
26-ஜூன்-202020:14:48 IST Report Abuse
siriyaar உங்களை மாதிரி துண்டு போடலாங்களா அய்யா
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூன்-202019:31:04 IST Report Abuse
S. Narayanan உண்மையான கருத்து. நன்றி.
Rate this:
Cancel
26-ஜூன்-202019:19:00 IST Report Abuse
ஆப்பு என்னமோ சக இந்தியர்களுக்கு இவிங்களுக்கு இருக்குற மாதிரி வீடு, ஆளுபடை, 15 டாக்டர்கள் இருக்குற மாதிரி பேசுறாரு. அவனவன் அடுத்த வேள புவாக்கு ஆலாப்பறக்கறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X