அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது: இபிஎஸ் பேச்சு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
COVID in Tamil nadu, Corona tn, EPS, CM, Trichy, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, தமிழகம், கொரோனா, கட்டுக்குள், உள்ளது, முதல்வர், இபிஎஸ், திருச்சி

திருச்சி: வல்லரசு நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில், தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இபிஎஸ் தலைமையில், இன்று (ஜூன் 26) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:


latest tamil news


இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் தங்கள் மாவட்டத்தில் வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் இரண்டு பரிசோதனை மையங்கள் உள்ளன. அதன் மூலம் இதுவரை 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர், மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, வைரஸ் தொற்றை நாம் தடுக்கின்ற நிலையில் இருக்கிறோம். கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கையால் இறப்பு சதவீதம் கட்டுக்குள் உள்ளது.


latest tamil news


உலக அளவிலேயே வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில், தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015ல் நடத்தினார். அதில், சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார். தமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து, சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம். கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202022:57:02 IST Report Abuse
RajanRajan எதுக்கும் உஷாரா இருந்துக்கோங்கப்பா. உண்மையான குரானா வைரஸ் ஆகஸ்ட் பதினாலாம் தியதி விடுதலை ஆவுதுப்பா. இ-பாஸ் போடுங்க. அவிங்க வந்து உங்க எல்லோருக்கும் ஆல் பாஸ் போட்டுட்டு போவுறாங்க.
Rate this:
Cancel
பெருமாள்சாமி, சென்னை தமிழகம் முழுவதும் தெருவுக்கு தெரு நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீர் கொடுக்கலாம். நாமும் அன்றாட பணியில் ஈடுபட தொடங்கலாமே.தனிமனித பொருளாதாரம் மிகவும் கடுமை பாதிப்படைந்துள்ளது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூன்-202019:26:02 IST Report Abuse
S. Narayanan தினசரி கொரோனா பரவி வரும் எண்ணிக்கையை பார்க்கும் போது எப்படி கட்டுக்குள் இருக்கிறது என்று சொல்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X