பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திற்குள் வரும், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள், இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்களுக்கு, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்ட எல்லைகளின் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கடும் சோதனைக்கு பின்னே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ப.வேலூர், காளிப்பட்டி, மல்லூர், பவுத்திரம், மங்கலபுரம், மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியாக உள்ளே வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஒவ்வொரு சோதனைச்சாவடிகளிலும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், ஊரகப்பணியாளர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். அதில், இரண்டு பிரிவுகளாக பாதுகாப்பு பணி நடக்கிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அந்ததந்த சோதனைச் சாவடிகளில் கண்காணிக்கப்படுகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்துக்குள் இ-பாஸ் பெற்று வரும் அனைத்து வாகனங்களுக்கும், கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X