பொது செய்தி

தமிழ்நாடு

கணினி மையங்களில் இ -பாஸ் பெற அலைமோதும் கூட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராசிபுரம்: வெளி மாவட்டங்களுக்கு செல்ல, இ- பாஸ் பெற, கணினி மையங்களில் மக்கள் குவிகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ -பாஸ் பெற வேண்டும். நாமக்கல் மாவட்ட மக்கள் பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் சேலத்திற்குதான் சென்று வருவர். அதேபோல், எல்லை பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் வசிப்பவர்களும் வேலைக்காக சேலத்திற்குதான் செல்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வில் சேலத்திற்கு இ -பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து தரப்பினரும் எளிதாக சேலம் சென்றுவந்தனர். நேற்று முதல், சேலம் செல்லவும் இ -பாஸ் தேவை என்பதால், இ -பாஸ் பெற கணினி மையங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கும் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட நாட்களில் மாத்திரை பெறவில்லை என்றால் மாதம் முழுவதும் பெற முடியாது என்பதால், இ - பாஸ் மூலம் சேலம் செல்ல விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல், ஊரடங்கு தளர்வில் பல்வேறு பணிகளுக்காக சேலம் சென்றவர்களும் தற்போது வெளியே வராமல் தவித்து வருகின்றனர். அவர்களும் இ - பாஸ் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X