பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.17.34 லட்சம் காணிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள், 17 லட்சத்து, 34 ஆயிரம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக தெலுத்தியிருந்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். ஊரடங்கால் கடந்த, 100 நாட்களாக கோவில் நடை திறக்கப்படவில்லை. இருந்தபோதிலும் நுழைவாயில் பகுதியில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தி செல்வர். கோவிலில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்படும். அதன்படி கடந்த பிப்.,16ல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவிலில் உள்ள, 10க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று, ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள, ஐந்து உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், 20 ஊழியர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்று காணிக்கை பணத்தை எண்ணினர். காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 5:00 மணி வரை பணி நடந்தது. இதில், ரொக்கமாக, 17 லட்சத்து, 34 ஆயிரத்து, 668 ரூபாய், 12 கிராம் தங்கம், 14 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது. சேலம் மண்டல அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, கோவில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் இப்பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X