பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த அளவே பஸ்கள் இயக்கம்: வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து சேவையை மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்க கலெக்டர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நேற்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பஸ்கள், 95 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்குள் டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில், சேலம் சாலையில் பரவச உலகம் வரை, துறையூர் சாலையில் பவுத்திரம் வரை, கரூர் சாலையில் ப.வேலூர் வரை, ஈரோடு சாலையில் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் வரை இயக்கப்பட்டன. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், ப.வேலூர் ஆகிய பகுதிகளுக்கு, 26 டவுன் பஸ்களும், ஆறு புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாததாலும், குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாலும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதனால், வெளியூர் பயணிகள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X