அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 3 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு?

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, Corona Cases, District wise, Madurai, Theni, Vellore, தமிழகம், கொரோனா, பாதிப்பு, மாவட்டம், உயர்வு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 25) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 71 ஆயிரத்தை நெருங்கியது. முதன்முறையாக 3 ஆயிரத்தை தாண்டியது மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் உச்ச அளவை எட்டியது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.


latest tamil news


மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,449 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வேலூரில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,013 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும், தேனியில் 32 பேருக்கும் இன்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்றைய உச்ச அளவை போல இன்றும் 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு பதிவாகும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
26-ஜூன்-202016:39:17 IST Report Abuse
Baskar தி.மு.க வினர் வி.சி.க வை சேர்ந்தவர்களால் மட்டுமே கோரோனோ பரவுகிறது. மக்கள் ஒழுங்காக தான் இருக்கின்றனர். இவர்கள் பயமுறுத்தி விடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X