சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளி 18 ஆண்டுகளுக்கு பின் கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி, 18 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. கடந்த, 2002 செப்., 22ல், இவரை கொலை செய்ததாக, மனைவி சாந்தி, பாட்டி மாராயி ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். சாந்தியின் தம்பி செந்தில்குமார் மட்டும் மனைவி, குழந்தைகளுடன் தலைமறைவானார். சாந்தி, மாராயி ஆகியோருக்கு மட்டும் வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு நாமக்கல் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2005ல், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு, 2007ல் சாந்தி உயிரிழந்தார். மாராயி வயது முதிர்வு காரணமாக, 2009ல் சிறையிலேயே இறந்தார். இவ்வழக்கில் செந்தில்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த, 2003ல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடிப்பதற்காக, நல்லிபாளையம் எஸ்.எஸ்.ஐ., சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கோவை மாவட்டம், சேர்வை காரம்பாளையம், மாப்பிள்ளைகவுண்டன்புதூர் என்ற ஊரில் குடும்பத்தினருடன் குடியிருந்து லாரி டிரைவராக வேலை செய்து வருவது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று காலை, கேரளாவில் இருந்து லாரி ஓட்டிவந்த செந்தில்குமாரை கோவை வழந்தாயமரம் சோதனைச்சாவடி அருகே கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X