பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி 24வது வார்டு: அமைச்சர் நேரில் ஆய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கரூர்: கரூர், நகராட்சிக்குட்பட்ட, 24 வது வார்டு பகுதிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். வீதிவீதியாக சென்று அப்பகுதி மக்களை சந்தித்து சாக்கடை, குடிதண்ணீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் கழிவுநீர் தேங்கி இருப்பதை பார்த்தார். உடனடியாக அவற்றை தூர் வார வேண்டும் என, உத்தரவிட்டார். சேதமடைந்த சாலைகளை, பேவர் பிளாக் கற்கள் பதித்து சீரமைக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். நகராட்சி கமிஷனர் சுதா, கரூர் மாவட்ட மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X