புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட கோரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share

குளித்தலை: குளித்தலையில், புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை கட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம், டி.எஸ்.பி., அலுவலகம், சப்- ஜெயில், பொதுப்பணித்துறை, சார் - கருவூலம், சப் -கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு மத்தியில், நூற்றாண்டு கடந்த, பத்திரப் பதிவு அலுவலகம் செயல்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கட்டடம் சேதமடைந்ததாக, பொதுப் பணித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், பெரியபாலம் பரிசல்துறை சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பழைய அலுவலகம் செயல்பட்ட இடத்திலேயே புதிய அலுவலகம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X