ரூ.2.43 கோடியில் குடிமராமத்து பணிகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.43 கோடியில் குடிமராமத்து பணிகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Added : ஜூன் 26, 2020
Share

கரூர்: ''நடப்பு ஆண்டில், 2.43 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மாவட்டத்தில் நடந்து வருகின்றன,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்
அரவக்குறிச்சி அருகில், சின்னதாராபுரம் வாய்க்காலில் தூர்வாருதல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணிகளை தொடங்கி வைத்து கூறியதாவது: மாவட்டத்தில், சின்னதாராபுரம், நஞ்சைகாளகுறிச்சி, அணைப்பாளையம் ஆகிய கிராமங்களில், அமராவதி ஆற்றில் மூன்று பழைய அணைக்கட்டு, செட்டிபாளையம் உட்பட நான்கு அணைக்கட்டுகளில் பிரியும், நான்கு பழைய பாசன வாய்க்கால்கள் மூலம், 13 ஆயிரத்து, 175 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. வாய்க்கால் குடிமராமத்து திட்டத்தின் கீழ், 2016 -2017ம் ஆண்டில், ஆறு பணிகள், 25.70 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2017 -2018ம் ஆண்டில், 60.40 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2019 - 2020ம் ஆண்டில், 1.74 கோடி ரூபாய் மதிப்பிலும், கடைமடைபகுதி வரை தண்ணீர் செல்லும் வகையில், தூர் வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு, 10 பணிகளுக்கு, 2.43 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. அதன்படி, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி வாயிலாக, 1,877 ஏக்கர் பாசன வசதிபெறும். தூர்வாரும் பணி மட்டுமல்லாது, வெள்ளத் தடுப்புச்சுவர்களும் கட்டப்படவுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். பொதுப்பணித்துறை அமராவதி வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், கூட்டுறவு சங்க பிரதிநிதி கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X