பொது செய்தி

தமிழ்நாடு

அவசரகால கடனளிப்பு திட்டம்: பயன்படுத்தி கொள்ள அழைப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, பொருளாதார இடர்ப்பாடுகளை சமாளிப்பதற்கு மத்திய அரசால் அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பிணையில்லாமல், 20 சதவீதம் வரை கூடுதல் மூலதன கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாயிலாக, கடன்கணக்கில் நிலுவையில் உள்ள தொகையில், 20 சதவீதம் வரை கடன் பெற இயலும். இக்கடன் தொகையை, நான்கு ஆண்டுகளில் திரும்பி செலுத்த வேண்டும். முதல், 12 மாதங்களுக்கு அசல் தொகை செலுத்த விலக்கு அளிக்கப்படும். செயலாக்க கட்டணம், பிணையத் தொகை இல்லை. அனைத்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள, பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் துவங்கப் பட்டுள்ள நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றுக்கு கடன் பெற தகுதி உள்ளது. இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X