பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லைக்குள் இயக்க உத்தரவு: பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கரூர்: மாவட்ட எல்லைக்குள் இயக்க உத்தரவிடப்பட்டதால், பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால், தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, 60 சதவீத பயணிகளுடன் ஜூன், 1 முதல் பஸ்கள் இயக்கப்படும் என, அரசு அறிவித்தது இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் மண்டலத்தில், 147 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்குள் இயக்க வேண்டும் என, அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நேற்று முதல் மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டதால், காலை, மாலை நேரங்களில் மட்டும் பயணிகள் வருகின்றனர். மற்ற நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவால், 100 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதில், திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லைகளான ஆண்டிபட்டிகோட்டை, இடையகோட்டை, கூடலூர், திருப்பூர், கரூர் மாவட்ட எல்லையாக ஒத்தமாந்துறை, நாமக்கல்- கரூர் எல்லைகளான தவிட்டுபாளையம், வாங்கல், திருச்சி - கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை வரை இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை குறைந்தால், அதற்கு ஏற்ப பஸ்களும் குறைக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X