மூடப்படாத மாவட்ட எல்லைகள்: கொரோனா பரவல் தடுப்பில் அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூடப்படாத மாவட்ட எல்லைகள்: கொரோனா பரவல் தடுப்பில் அலட்சியம்

Added : ஜூன் 26, 2020
Share

கரூர்: மாவட்டத்தில் எல்லைகள் மூடப்படாமல், கொரோனா பரவல் தடுப்பில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஜூன், 1 முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை மூடல், மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ரத்து, இ-பாஸ் கட்டாயம் உட்பட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட, 18 எல்லை பகுதிகள் உள்ளன.பெரும்பாலான எல்லைகள் மூடப்படாமல் உள்ளன. அதிலும், ஒன்பது இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். அங்கு, போலீசார் போதிய கண்காணிப்பு இல்லாததால் வாகன நடமாட்டம் வழக்கம் போல காணப்பட்டது. வெளி மாவட்டங்களில் மக்கள் அதிகளவில் வருவதால், மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை, வாங்கல், வெள்ளியணை உட்பட கிராமப்புறங்களில் உள்ள எல்லை வழியாக மக்கள் வருகின்றனர். அங்கு போலீசார் இல்லாததால், எளிதில் கரூருக்குள் வருகின்றனர். முக்கிய இடங்களில் குறைவான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், வாகனத்தில் வருபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால், கொரோனா தொற்றை குறைக்க முடியாது என, சுகாதாரத்துறையினர் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X