பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் மிதமான மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த, 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூரில், நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் ஓடியது. இதுபோல், நேற்று முன்தினமும் மழை பெய்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கரூர், 13.33 மி.மீ ., க.பரத்தியில், 2.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X