பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளி நிவாரண உதவி: நேரடியாக வழங்க ஏற்பாடு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கரூர்: தமிழகத்தில், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் கொரோனா சிறப்பு நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது. இந்த நிதியானது, வி.ஏ.ஓ., மூலம் நாளை முதல் வழங்கப்படவுள்ளது. இந்த உதவித்தொகையினை பெறுவதற்காக அலுவலகம் செல்லும் அலைச்சலை தவிர்க்கும் வகையில், அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்கள் வீட்டிற்கு நிதியுதவியினை வழங்க வரும் வி.ஏ.ஓ.,விடம் தேசிய அடையாள அட்டையை காண்பித்து நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம். சிரமம் இருந்தால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை, 94999 33479 என்ற எண்ணிலோ, முடநீக்கு வல்லுனரை, 82200 61044 என்ற எண்ணிலோ, மாநில உதவி மையத்தை, 18004250111 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X