‛நான் இந்திராவின் பேத்தியாக்கும்': பிரியங்கா சவால்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (84)
Share
Advertisement
Indira, Grand Daughter, Priyanka, indira gandhi, priyanka gandhi, uttar pradesh, UP, Govt, இந்திரா, பேத்தி, பிரியங்கா, சவால், உபி

லக்னோ: உ.பி., அரசு தனக்கு எதிராக எந்த நடவடிக்கை வேண்டுமென்றால் எடுக்கட்டும். ஆனால் உண்மையை தொடர்ந்து வெளிகொண்டு வருவேன் என காங்., பொது செயலர் பிரியங்கா சவால் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று விவகாரத்தில் உ.பி., அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து சமூகவலைதளமான டுவிட்டரில் பிரியங்கா விமர்சித்து வருகிறார். ஞாயின்றன்று தனது டுவிட்டர் பக்கத்தில், கான்பூரில் உள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பும், அதில் இரண்டு பேர் கருவுற்றிருந்ததாக செய்தியை பகிர்ந்து, பீஹாரின் முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வோடு ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார். கான்பூர் காப்பகம் குறித்து தவறான தகவலை பரப்பியது தொடர்பாக 3 நாட்களுக்கு விளக்கம் தர வேண்டுமென பிரியங்காவுக்கு, மாநில குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.


latest tamil news


ஜூன் 22ம் தேதி, ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 28 பேர், 48 மணிநேரத்திற்குள் உயிரிழந்ததாகவும், இது உ.பி.அரசின் நிலைமையை காட்டுவதாக செய்தி ஒன்றை பிரியங்கா பகிர்ந்திருந்தார். மேலும் டில்லி, மும்பையை விட ஆக்ராவின் கொரோனா இறப்பு விகிதம் (6.8 சதவீதம்) அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு நரேன் சிங் செவ்வாயன்று, பிரியங்கா விளக்கம் அளிப்பதோடு, டுவிட்டர் பதிவை நீக்குமாறு கேட்டுகொண்டார்.


latest tamil news


இது தொடர்பாக இன்று (ஜூன் 26) தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது: ஒரு பொதுநல ஊழியர் என்ற முறையில் எனது கடமை உத்தரபிரதேச மக்களை நோக்கியது. அந்த கடமை உண்மையை அவர்கள் முன் கொண்டு வருவது. எனது கடமை அரசின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது அல்ல. என்னை அச்சுறுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தனது நேரத்தை வீணடிக்கிறது. நீங்கள் விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் உண்மையை வெளிப்படுத்துவேன். நான் இந்திராவின் பேத்தி. சில தலைவர்களை போல பா.,ஜ.,வின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர் அல்ல' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஜூலை-202008:21:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni மிக்க நன்றி கொடுங்கோலாட்ச்சி செய்துமக்களை ஏமாற்றிய மவராசியேதான் உன் பாட்டி அவளைப்போலவே இருக்குறதால நீயுமவளாக மாரவேமுடியாதுடீ மக்கள் எல்லாம் உன்னையும் உன் அம்மா அண்ணா புருஷன் எல்லோரையும் ஒரே அடியாக தூக்கி இடாலிக்கே அனுப்பப்போறோம் நடக்கும் இது சத்தியம் சொல்லும்மா நீ இருக்கும் வீடுக்குவாடகை இன்றைய தேதியே 70 000 ரூபாய் கொடுக்குறியா தாயீ ராஜீவ் பொன்னுணர சலுகை எல்லாம் உனக்கு திருமணம் ஆவும்வரையேதான் திருமணம் ஆனால் நீ உன் புருசனுக்கு சொந்தம் ஒழுங்காவீடடைகாலிபண்ணிட்டு கொள்ளை அடிச்சுவீடுகட்டிருக்கியே அதுக்கே போயி சேரவும் நீ உன் ப்ருருஷன் அண்ணா அம்மா எல்லோரும் எவ்ளோஆயிரம் கொடிகள் சுருட்டினில் என்றும் தெரியும் வீண் ஜம்பம் தேவையே இல்லே getlost
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
26-ஜூன்-202022:25:07 IST Report Abuse
adalarasan ஆமாம் EMERGANCY மூலமாக, POWERல். இருக்க முயன்ற இந்திராஜியின் பேத்திதான்? அதே சமயம், காந்தி பெயரை வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பம் நாட்டில் கொள்ளையடித்து ஊழல் குற்றங்களில், மாட்டிக்கொண்டு இருப்பது, வேதனையும், நேருகியின் குடும்ப பெயரையும், காங்கிரசையும் கேட்ட பெயர் வரவழைக்கிறதே என்பதை நினைத்தால், வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது?
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
26-ஜூன்-202021:00:53 IST Report Abuse
Covaxin ஊழல் செய்து கொள்ளையடிப்பதில் எங்க நேரு குடும்பத்தை நெருங்கக்கூட முடியாதாக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X