‛நான் இந்திராவின் பேத்தியாக்கும்: பிரியங்கா சவால்| 'I am Indira Gandhi's grand-daughter': Priyanka dares UP govt to act against her | Dinamalar

‛நான் இந்திராவின் பேத்தியாக்கும்': பிரியங்கா சவால்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (84)
Share
Indira, Grand Daughter, Priyanka, indira gandhi, priyanka gandhi, uttar pradesh, UP, Govt, இந்திரா, பேத்தி, பிரியங்கா, சவால், உபி

லக்னோ: உ.பி., அரசு தனக்கு எதிராக எந்த நடவடிக்கை வேண்டுமென்றால் எடுக்கட்டும். ஆனால் உண்மையை தொடர்ந்து வெளிகொண்டு வருவேன் என காங்., பொது செயலர் பிரியங்கா சவால் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று விவகாரத்தில் உ.பி., அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து சமூகவலைதளமான டுவிட்டரில் பிரியங்கா விமர்சித்து வருகிறார். ஞாயின்றன்று தனது டுவிட்டர் பக்கத்தில், கான்பூரில் உள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பும், அதில் இரண்டு பேர் கருவுற்றிருந்ததாக செய்தியை பகிர்ந்து, பீஹாரின் முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வோடு ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார். கான்பூர் காப்பகம் குறித்து தவறான தகவலை பரப்பியது தொடர்பாக 3 நாட்களுக்கு விளக்கம் தர வேண்டுமென பிரியங்காவுக்கு, மாநில குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.


latest tamil news


ஜூன் 22ம் தேதி, ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 28 பேர், 48 மணிநேரத்திற்குள் உயிரிழந்ததாகவும், இது உ.பி.அரசின் நிலைமையை காட்டுவதாக செய்தி ஒன்றை பிரியங்கா பகிர்ந்திருந்தார். மேலும் டில்லி, மும்பையை விட ஆக்ராவின் கொரோனா இறப்பு விகிதம் (6.8 சதவீதம்) அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு நரேன் சிங் செவ்வாயன்று, பிரியங்கா விளக்கம் அளிப்பதோடு, டுவிட்டர் பதிவை நீக்குமாறு கேட்டுகொண்டார்.


latest tamil news


இது தொடர்பாக இன்று (ஜூன் 26) தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது: ஒரு பொதுநல ஊழியர் என்ற முறையில் எனது கடமை உத்தரபிரதேச மக்களை நோக்கியது. அந்த கடமை உண்மையை அவர்கள் முன் கொண்டு வருவது. எனது கடமை அரசின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது அல்ல. என்னை அச்சுறுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு தனது நேரத்தை வீணடிக்கிறது. நீங்கள் விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் உண்மையை வெளிப்படுத்துவேன். நான் இந்திராவின் பேத்தி. சில தலைவர்களை போல பா.,ஜ.,வின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர் அல்ல' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X