ஐ.மு., கூட்டணி ஆட்சியில், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ராஜிவ் அறக்கட்டளைக்கு நன்கொடை: நட்டா தாக்கு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
காங்கிரஸ், ஐக்கியமுற்போக்கு கூட்டணி, ஐமுகூ, பிரதமர் நிவாரண நிதி,  ராஜிவ் அறக்கட்டளை, ராஜிவ்காந்தி அறக்கட்டளை, ராஜிவ், ராஜிவ்காந்தி, நட்டா, ஜேபி நட்டா, பாஜ, பாஜதலைவர் நட்டா, JP Nadda, Rajiv Gandhi Foundation, PMNRF,  India, china, india-china face off, eastern ladakh, ladakh, congress, UPA regime, BJP, Politics, Prime Minister's National Relief Fund,  Rajiv Gandhi Foundation, RGF, BJP president, Prime Minster's Office, PMO

புதுடில்லி: கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டதாக பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, காங்., கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனமாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார். இதன் உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் உட்பட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு, சீன துாதரகம் சார்பில், 2005 - 06ம் ஆண்டில், நிதி வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி, 2005 - 06ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது என தெரிவித்திருந்தார்.


latest tamil news
இந்நிலையில், பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது
பிரதமர் தேசிய நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா
ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான்.
எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன. என தெரிவித்து அது தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.


latest tamil newslatest tamil news


மற்றொரு பதிவில்,இந்தியா மக்கள், கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை, தேவைப்படும் சக மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தனர். . பொது மக்களின் பணத்தை, ஒரு குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு அளிப்பது பெரிய மோசடி மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதியாகும் எனக்கூறியுள்ளார்.மற்றொரு பதிவில் , ஒரு குடும்பத்தின் பணத்தின் மீதான ஆசையே நாட்டை பாதித்துள்ளது. இப்படி சுயலாபத்திற்காக நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடித்த காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரசின் ஏகாதிபத்திய பரம்பரை சுயலாப கொள்ளைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூன்-202019:23:24 IST Report Abuse
Janarthanan இந்த RGF , Chinese Association for Internationally Friend Contact , என்ற அமைப்பு டொனேஷன் கொடுத்து உள்ளது , இந்த அமைப்பு சீனா அரசின்/ ராணுவத்தின் மறைமுக உளவு அமைப்பு என்ற செய்திகள் வருகிறது , வெவேறு நாட்டிலும் முக்கிய தலைவர்கள் ,கட்சிகள் உடன் காண்டாக்ட் ஏற்படுத்தி தகவல் பரிமாற்றி கொள்ளுவதை மேற்கொள்ளுவது தான் இவர்கள் வேலையமாம் ??? சீனா காங்கிரஸ் என்ன என்னவற்றை தெரிவித்து இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை ???? தமிழ்நாட்டில் யாரு கூட காண்டாக்ட் இருக்காங்க பாருங்கப்பா ??
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
26-ஜூன்-202018:50:38 IST Report Abuse
Indhuindian PMNRF, meant to help people in distress, was donating money to Rajiv Gandhi Foundation in UPA years. Sir. Congress is really in distress and is in a hurry to loot the country. What does it matter whether it is 2 G or Coal allotment or PM relief Fund. Rupee by any name and source mean the same to Congress
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
26-ஜூன்-202018:23:18 IST Report Abuse
Rpalnivelu கட்டுக் குடும்பம் மாதிரி, திருட்டு கான்+க்ராஸ் குடும்பமும் கொள்ளை கூட்டம்தான். அந்தக் காலத்தில் பரூவா என்கின்ற கான்+க்ராஸ் காமெடியன் இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என்று பிதற்றி திரிந்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X