பொது செய்தி

தமிழ்நாடு

35 குட்டிகளுடன் கண்ணாடி விரியன் விஷ பாம்பு; வீடியோ பாருங்கள்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

கோவை: கோவையில் பிடிபட்ட, அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு, அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



latest tamil news




கோவை கோவில்மேடு திலகர் வீதியில் வசிப்பவர் மனோகரன். இன்று அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டார். பாம்பு பிடிக்கும் முரளி என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.அங்கு சென்ற முரளி, குளியல் அறையின் ஒரு மூலையில் இருந்த பாம்பை மீட்டு, தனது பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அதை வனப்பகுதிக்குள் விட கொண்டு சென்ற போது, அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த முரளி, அந்த பையை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளார்.


latest tamil news



தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு, சுமார் இரண்டு மணி நேரத்தில் 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பாம்பையும் குட்டிகளையும் வனத்துறையினரின் ஆலோசனைப்படி, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.


latest tamil news



அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த கண்ணாடி விரியன் குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையைச் சேர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
28-ஜூன்-202009:47:29 IST Report Abuse
Lakshmipathi S அதிசயம் இல்லை என்றாலும் நிஜத்தில் மனிதர்களும் இப்படியுள்ளார்களா?
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
26-ஜூன்-202021:34:55 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் கண்ணாடி வீரியன் பாம்பை விட ஆபத்தானவர் ஆனா அவருக்கு ஆறு குட்டிங்க தான்
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
27-ஜூன்-202009:23:22 IST Report Abuse
மூல பத்திரம் என்னது 6 குட்டிங்க என்றால் என்ன அர்த்தம், வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூறக்கூடாது ஆக அர்த்தம் என்ன என்று கூறவும்...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூன்-202018:39:58 IST Report Abuse
madhavan rajan சாதாரணமாக பாம்புகள் முட்டைதான் இடும். இது அரியவகையோ?
Rate this:
26-ஜூன்-202020:38:31 IST Report Abuse
sunmohanபாம்பு முட்டை தான் குஞ்சி பொரிக்கும்............????????????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X