அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; டிரம்ப் அரசை சாடிய பில் கேட்ஸ்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெருகிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அமெரிக்க தொழில் ஜாம்பவான் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் உலகளவிலும் கொரோனா தாக்கம் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக உள்ளது என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிஎன்என்.,க்கு பேட்டியளித்த பில்கேட்ஸ், வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு போதுமான நடவடிக்கைகளில்
Bill Gates, US, Trump, Govt, Not Even Close, Fight, Pandemic, பில்கேட்ஸ், அமெரிக்கா, டிரம்ப், கொரேனா, தொற்று, businessman, america, donald trump, COVID-19 pandemic, coronavirus, corona, coronavirus outbreak, corona news, covid-19, corona in US, Corona spread,

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெருகிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அமெரிக்க தொழில் ஜாம்பவான் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் உலகளவிலும் கொரோனா தாக்கம் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக உள்ளது என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிஎன்என்.,க்கு பேட்டியளித்த பில்கேட்ஸ், வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு போதுமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இன்னும் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவில் தாமதமாக நடைபெறுவதாகவும் ஆட்சி செய்பவர்கள் தங்களது உத்தரவுகளை சரியான முறையில் அமைச்சர்களிடம் பகிரத் தவறிவிட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


latest tamil news


கடந்த எட்டு வாரங்களுக்கு முன்னர் பில்கேட்ஸ் டவுன்ஹாலில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த கொரோனா தாக்கத்தைக் காட்டிலும் தற்போது இரு மடங்காகி விட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பழமைவாதிகள் பலர் உள்ளதாகவும் நோயின் தீவிரத்தை அறியாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியம் செய்ததாகவும் கூறினார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தின் கவர்னர் தனது உற்ற நண்பர் எனத் தெரிவித்த கேட்ஸ், மாஸ்க் அணிய அவர் வலியுறுத்தியும் மாகாண மக்கள் அதை அலட்சியம் செய்வதாகக் கூறியுள்ளார்.


latest tamil news


அமெரிக்காவின் மிகச்சிறந்த தொற்று நோய் நிபுணர்களில் ஒருவரான ஆண்டனி ஃபவுஸியுடன் தான் அடிக்கடி பேசி வருவதாகத் தெரிவித்த கேட்ஸ், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு குறித்து விசாரித்து வருகிறார். 2020ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ம் ஆண்டின் துவக்கத்திலோ அமெரிக்கா, தடுப்பு மருந்து கண்டுபிடித்து உலகுக்கு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக 100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிதி, உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உதவும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhithyan - chennai,இந்தியா
26-ஜூன்-202020:35:05 IST Report Abuse
Adhithyan கடந்த காலதில் இருந்த அதிபர்களை விட அதிபர் டிரம்ப் மிகவும் சிறந்த மனிதர் நிச்சயம் வரலாற்றில் புகழ் பெற போகும் மனிதர் டிரம்ப் அடுத்த அதிபர் அவர்தான் வாழ்க டிரம்ப்
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
26-ஜூன்-202020:20:42 IST Report Abuse
Amal Anandan இந்தியர்களை வெறுக்கும் டிரம்புக்கு இங்குள்ளவர்கள் கொடி பிடிக்கிறார்கள் அவ்வளவுதான் அறிவு.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
26-ஜூன்-202018:19:38 IST Report Abuse
mindum vasantham Blame Trump spread the disease -billgates
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X