பயங்கரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர், 5 வயது குழந்தை மரணம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர்.இன்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது
CRPF, Trooper, 5 Year Old, Killed, Terrorist, Attack, JK, Jammu and Kashmir, Anandnag district, soldiers, jawans, CRPF soldier, Central Reserve Police Force,  south Kashmir, CRPF personnel, minor boy, Padshahi Bagh bridge, காஷ்மீர், பாதுகாப்பு, வீரர், குழந்தை, பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர்.

இன்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப்., வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.


latest tamil news


பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், வியாழன் மாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
26-ஜூன்-202019:24:22 IST Report Abuse
Chandramoulli குழந்தையை வைத்து ஊடுருவ முயற்சி . மிகவும் கண்டிக்கத்தக்க செயல் . POK வை விரைவில் கையகப்படுத்தினால் தான் இதற்க்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்க முடியும்
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
26-ஜூன்-202019:12:11 IST Report Abuse
Narayanan Muthu குழந்தை எப்படி அங்கு வந்தது. அது யாருடைய குழந்தை. நமது பாதுகாப்பு படை வீரரின் குழந்தையா தீவிரவாதியின் குழந்தையா அல்லது பொது மக்களின் குழந்தையா என்கிற விவரம் செய்தியில் எனோ கொடுக்கப்படவில்லை.
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
26-ஜூன்-202018:09:05 IST Report Abuse
K.Muthuraj இங்கே குழந்தை எவ்வாறு மாட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. இதுவே ராணுவத்தால் குழந்தை இறந்தால் நம் போராளிகள் பொங்கி எழுந்திருப்பார்கள். காஷ்மீர் முழுதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X