பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா; ஒரே நாளில் 3,645 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 26) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆகவும், பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 122 பேர்
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 26) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆகவும், பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 122 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 74,622 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 89 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,317 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,92,991 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news


இன்று சென்னையில் 37 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேரும், மதுரையில் 2 பேரும், விருதுநகர் ஒருவரும் என மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 31 பேர் அரசு மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
27-ஜூன்-202009:08:28 IST Report Abuse
Chandramoulli இதில் தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு என்கிற மாதிரி செய்தி உள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதமாக மிக அதிக எண்ணிக்கையில் தொற்று பரவ ஆரம்பித்து விட்டது. மருந்து கண்டுபிடிக்க படவில்லை. அரசு எவ்வளவோ சொல்லியும் மக்கள் எந்த அறிவுரையையும் ஏற்கும் மனநிலையில் இல்லை. அலட்சிய போக்கு அதிகம். இதற்க்கு முழு முக்கிய காரணம் உருப்படாத எதிர்க்கட்சிகள் மக்களை சுயமாக சிந்திக்க வைக்கவில்லை. ஒரு சில கட்சிகள் சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மொத்த ஊடகங்களை கையில் வைத்து கொண்டு அரசுக்கு எதிராக முழுமையாக செய்து விட்டார்கள். இன்று தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்கள், மற்றும் செய்தித்தாள், இதழ்கள் மூலம் அரசுக்கு எதிராக கட்சியின் எண்ணங்களை திணிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பூரண ஒத்துழைப்பு இல்லாத வரை நோயை கட்டுப்படுத்த முடியாது. ஏப்ரல் 30 வரை தமிழகம் மிகவும் சரியான பாதையில் சென்றது. ஒன்றிணைவோம் வா என்று தெரு தெருவாக மக்களை சந்தித்து அரசின் விதிமுறையை மீறி எல்லோருக்கும் நோயை பரப்பி விட்டனர். இதில் அரசியல் முக்கிய இடம் பிடித்து உள்ளது. அவர்கள் நினைத்த மாதிரி தமிழகம் முழுவதும் நோய் உள்ளது. முதல்வர் வெறுத்து போகும் அளவுக்கு கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நினைத்த எண்ணத்தை எதிர்கட்சியினர் திறம்பட செய்து விட்டனர். அவர்களின் பதவி ஆசைக்கு மக்கள் பலிகடா. இதுதான் நடக்கிறது தமிழகத்தில்
Rate this:
Cancel
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202008:07:31 IST Report Abuse
Pa.Arumugam இதில் இனி அரசு செய்வது ஒன்றுதான் ..பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுமட்டுமே முடியும் ..போதிய அளவு மக்களுக்கு எழுச்சி ஊட்டியாகிவிட்டது .அரசின் விளம்பரத்துறையும் அரசி அதிகார வட்டங்களும் செழிப்படையும் வரை மக்களுக்கு கொரோனபற்றியும் ,அதன் பாதிப்பு தன்மை. அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கதற கதற கதியாகிவிட்டது ..மக்கள் அடங்கவேண்டும் ..ஒரு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கூறியதைப்போல மக்கள் ஒரு இரண்டு-மூன்று மாத காலம் சில சுகங்களை துறக்க முடியாதா? எல்லோரும் தினமும் மீன்,மட்டன்,கோழிக்கறி இல்லாமல் சாப்பிடமாட்டார்களா? தினமும் காய்கறி,கூட்டு,பொரியல்-அவியல்,பாயாசம் இல்லாமல் அவர்களுக்கு உண்ணும் பழக்கம் இல்லையா? எதிர்க்கட்சி தலைவர் புலம்புவதை பற்றி கவலைப்படாமல் மக்கள் தங்களை பாதுகாக்க அரசின் வழிமுறைகளை பின்பட்டவேண்டும் ..கொரோன வைரஸ் தமிழ்நாட்டுமட்டுமே அல்லது இந்தியாவுக்கு மட்டுமே உரியது அல்ல..எல்லாவகையிலும் பலம் பொருந்திய வல்லரசுகளும் -மருத்துவ துறையும் வலிமை மிக்க நாடுகளும் திணறி திண்டாடும் நம்மாலும் ஒண்டும் செய்ய இயலாது ..தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், தேசிய அரசியல் தலைவர்களும் மக்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் அறிவுரையும் - வழிகாட்டுதலும் கூறாமல் அல்லது அரசுக்கு மேதாவித்தனமாக ஏதாவது வேறு அறிவுரைகூறாமல் அரசின் செயல்களையும் ,தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு-பகலாக உழைக்கும் அதிகார அரசு அதிகாரிகளின் செயல்களை கொச்சைப்படுத்தி தங்கள் அரசியல் அரிப்புகையும் கொரோன வைரஸ் பற்றிய தங்கள் அறியாமையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் .. மக்களுக்கு ஊடகங்களும் ,அறிவியல் அறிஞர்களும் ,மருத்துவ வல்லுனர்களையும் விட எழுத படிக்க தெரியாத அரசியல் தலைவர்கள் தங்களின் மேதாவித்தனத்தை காட்டாமல் அமைதிகாத்து , மக்களுக்கு போதிய விழிப்புணர்வை எடுத்துக்கூறி, அரசும் ,மருத்துவவல்லுனர்களும் கூறிவரும் வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி மக்களை ஒரு குறிப்பிட்ட காலம் அமைதிகாக்க அடங்கிவீட்டில் தனித்திருக்க அறிவுரை வழங்கினால் மட்டுமே நம் நாட்டை இந்த சப்பை மூக்கனின் கொடிய வைரஸிலிருந்து காப்பாற்ற முடியும் ..இதில் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்து மக்களை நல்வழி படுத்துவதுதான் தர்மம் ..இப்ப அரசியல் வேண்டாம் ..
Rate this:
Cancel
27-ஜூன்-202006:27:34 IST Report Abuse
இவன் ஒருத்தனும் சொன்னதை கேட்கல, ஒழுங்கா வீட்ல இருங்க டா னு சொன்ன கேட்காம ஒன்றிணைவோம் வா னு கெளம்பிட்டானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X