'அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா'; சுகாதாரத்துறை பகீர் ரிப்போர்ட்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் தற்போதுவரை, குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' என, அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.latest tamil news
அமெரிக்காவில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24.7 லட்சத்தைக் கடந்துள்ளது; 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய மதிப்பீட்டின்படி, 'அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை அடைந்து வருவது கவலையளிக்கிறது.


latest tamil news'வரும் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.80 லட்சமாக அதிகரிக்க கூடும்' என, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 'ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1.46 லட்சமாக கட்டுப்படுத்த முடியும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க மக்கள் அனைவரும், முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுகாதாரத்துறையே, இரண்டு கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூன்-202022:43:19 IST Report Abuse
Tamilan Accenture மட்டுமல்ல , கொரானாவால் ஏற்பட்ட வளர்ச்சியால் அதைபோல் உலகமுழுவதிலுமுள்ள மென்பொருள் நிறுவனகள அனைத்தும் தறிகெட்டு எகிறிக்கொண்டிருக்கிறது . கொரானாவால் அதிக கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் பட்டியல் ரிலைன்ஸ் , அதானி , உலக மென்பொருள் நிறுவனங்கள் என பெரும் கொள்ளை அடிப்பவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது .
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27-ஜூன்-202016:04:10 IST Report Abuse
 Muruga Velungal karutthukku enna aadhaaram ......
Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202020:36:17 IST Report Abuse
Tamilanநேற்று உலகமெல்லாம் இருக்கும் பங்குசந்தைகளில் அணைத்து தரப்பட்ட பங்குகளின் மதிப்பு இறங்கும்போது , இந்த ஒரு கம்பனியின் வளர்ச்சி அறிக்கையால் அதுவும் கொரானா கால வளர்ச்சி அறிக்கையால் உலகமெல்லாம் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததுடன் , ஒட்டுமொத்த சந்தையின் மதிப்பையே உயர்த்துமளவுக்கு இருந்தது ....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202022:22:36 IST Report Abuse
தல புராணம் அவங்க உண்மையை தைரியமா சொல்றாங்க..
Rate this:
Cancel
ACN Chennai -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202020:26:20 IST Report Abuse
ACN Chennai How Accenture is benefit out of this. Please let me know for my understanding.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X