நாய்க்கு நடமாடும் இயந்திரம் செய்த உரிமையாளர்; டுவிட்டரில் வைரலாகும் வீடியோ

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
லண்டன்: நாய் வகைகளிலேயே இங்கிலீஷ் புல்டாக் எனப்படும் நாய் வகை அதிக நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகை ஆகும். இந்த நாய் பிரசவம் முதலே சிரமப்பட்டே வெளியே வரும்.இதன் தலையின் அமைப்பு மிகவும் பெரியதாக இருப்பதால் பிரசவத்தின்போது ஃபோர்சப்ஸ் கருவி பயன்படுத்திதான் இதனை வெளியே எடுக்க வேண்டும். தவிர இந்த நாய்க்கு அதன் வாழ்நாள் முழுவதும் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட

லண்டன்: நாய் வகைகளிலேயே இங்கிலீஷ் புல்டாக் எனப்படும் நாய் வகை அதிக நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகை ஆகும். இந்த நாய் பிரசவம் முதலே சிரமப்பட்டே வெளியே வரும்.இதன் தலையின் அமைப்பு மிகவும் பெரியதாக இருப்பதால் பிரசவத்தின்போது ஃபோர்சப்ஸ் கருவி பயன்படுத்திதான் இதனை வெளியே எடுக்க வேண்டும். தவிர இந்த நாய்க்கு அதன் வாழ்நாள் முழுவதும் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.latest tamil news


குறிப்பாக மூச்சுவிடுவதில் சிரமம், முடக்கு வாதம், வயிற்று உபாதைகள் ஏற்படும். இதன் மருத்துவ செலவுக்கு பயந்தே பலர் இந்த நாயை வாங்குவதைத் தவிர்ப்பர். இருந்தாலும் இந்த நாய்க்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில் நாய் விற்பனையாளர்கள் பலர் ஒரு லட்சம் ரூபாய்வரை இந்த நாயை விற்கின்றனர். குள்ளமாக வோடஃபோன் விளம்பரத்தில் வரும் பக் நாய் போலக் காட்சியளிக்கும் புல்டாக், பொமேரியன் நாய் வகையைப் போல மிகவும் பாசமான குடும்பத்துக்கு ஏற்ற நாய். குழந்தைகளுடன் நன்றாக விளையாடும். அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இந்த நாயை வளர்க்கலாம். அதிகம் குறைக்காத இந்த நாய் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு தூங்குவதால் அதீத உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினசரி நடைப்பயிற்சி அளிக்காவிட்டால் இந்த நாய்க்கு உடற்பருமன் காரணமாக குடல் சுற்றல் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம். ஆனால் சோம்பேறி நாய். நாள் முழுவதும் உறங்கிக்கொண்டே இருக்கும். 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட புல்டாக் இன நாய்கள் தற்போது டாய் பிரீட் எனப்படும் சிறிய வகை செல்ல நாய்களாக வளர்க்கப்படுகின்றன. நாய் வகையில் அமெரிக்கன் புல்டாக், இங்கிலீஷ் புல்டாக், பிரஞ்சு புல்டாக் என மூன்று வகைகள் உண்டு.


latest tamil news


இதில் அதிகமாக பார்வையாளர்களை கவர்வது இங்கிலீஷ் ஃபுல் டாக். இதன் தோல் மடிப்புகள் மற்றும் உருண்டை முகம் காண்போரைக் கவரும். இந்த கவர்ச்சிக்காகவே இந்தியாவில் செல்வந்தர்கள் பலர் இந்த நாயை தங்களது செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்கின்றனர். தற்போது லியோ என்ற இங்கிலீஷ் புல்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்படி என கேட்கிறீர்களா? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டரில் @buitengebieden என்பவரது ஒரு டுவீட் வைரலானது. தற்போது அது மீண்டும் வைரலாகியுள்ளது. ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் கால் எலும்பு முடங்கும் நோய் தாக்கப்பட்ட ஒரு இங்கிலீஷ் புல்டாகுக்கு அதன் உரிமையாளர் படிகள் ஏறி இறங்க ஓர் சிறப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.


latest tamil news


இதனைக்கொண்டு அந்த நாய் எளிதில் மாடிப்படி ஏறி இறங்குகிறது. டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே 6.6 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. மிகவும் கொடுத்து வைத்த நாய் என சமூக வலைதளங்களில் இதனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதன் உரிமையாளரின் இரக்க குணத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். சிறந்த நாய் வளர்ப்பாளர் என்ற விருதை அவருக்கு அளிக்க வேண்டுமென பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


லியோ புல்டாக் படிகள் ஏறி இறங்கி வர உதவும் இயந்திரம் லண்டன் சிட்டி பஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பொதுவாக புல்டாக் உரிமையாளர்கள் ஆசைக்காக அதனை அதிக விலை கொடுத்து வாங்கி பின்னர் தொடர்ந்து ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் மருத்துவ செலவுகள் காரணமாக அவற்றை குறைந்த விலைக்கு வேறு யாருக்காவது விற்க முயன்று வருவர். இவ்வாறு செய்யாமல் லியோவின் உரிமையாளர் தனது கால் ஊனமான நாயை அரவணைத்து அதற்காக இந்த இயந்திரத்தை உருவாக்கி அதனை நடக்க வைத்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X