பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் டில்லி சுகாதார அமைச்சர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
Delhi, Satyendar Jain, Tests Negative, Covid-19, Minister, delhi minister, health minister, india, corona patient, coronavirus outbreak, covid-19 pandemic, corona recovery, health, disease, delhi health minister, covid-19, coronavirus, டில்லி, அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், கொரோனா, நெகடிவ், இல்லை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, இன்று (ஜூன் 26) எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.

டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இதில் சுகாதார அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் உள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கி மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதார அமைச்சரான இவர், முன்களப்பணியாளராக செயல்பட்டார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தீவிர காய்ச்சல், மூச்சுத் திணறலால் டில்லியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அவர் உடல்நிலை மோசமடைந்து ஆக்சிஜன் செரிவின் அளவு குறைந்ததால், தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பிளாஸ்மா சிகிச்சை அளித்தனர். அதனால் அவர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்படும் அளவுக்கு முன்னேறினார். இந்த நிலையில் அவரிடம் மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவர் இன்று மாலை வீடு திரும்ப உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X