சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்
இயற்கையின் அழகு

இயற்கை எழில் மிக்க கொடைக்கானல் ஏரி, 150 ஆண்டுகள் பழமையானது. 1863ல் மதுரை கலெக்டர் லிவிஞ்ச், கொடைக்கானல் வந்தார். தற்போதுள்ள ஏரி பகுதியில் ஒரு சிறிய நீரூற்று மட்டுமே இருந்தது. இதை அகலப்படுத்தி, சிறியகுளம் அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தை உடனே செயல்படுத்தினார். பின் செயற்கையாக ஒரு ஏரியை உருவாக்கினார். இதன் சுற்றளவு 4.5 கி.மீ., பரப்பு 60 ஏக்கர், ஆழம் 35.6 அடி. ஏரி நிரம்ப நீரூற்று போதாது என கருதி, வனப்பகுதிகளில் இருந்து ஓடிவரும் மழைநீர் ஏரியில் சேரும் வகையில் மாற்றினார்.

தகவல் சுரங்கம்
நிற்காமல் செல்லும் ரயில்

கனமழை மற்றும் வெள்ளத்தால் ரயில்கள் ரத்து செய்யப் படுவது போல, வடமாநிலங்களில் கடுங்குளிரில் சில ரயில்கள் ரத்து செய்யப்படும். ஆனால் ஹரியானாவின் கல்கா - இமாச்சல் தலைநகர் சிம்லா வரை செல்லும் ரயில், கடும் பனியிலும் ரத்து செய்யப்படுவதில்லை. ஏனெனில் இதில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் கருவிகள் உள்ளன. இந்த ரயில், ரயில்பாதை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 102 சுரங்கப்பாதைகள் வழியே செல்லும் இந்த ரயில் பாதை 1898ல் துவங்கப்பட்டது. 1903 முதல் கல்கா - சிம்லா ரயில் ஓடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X