'ராஜிவ்' மையத்திற்கு தரப்பட்ட பொதுத்துறை, 7 அமைச்சக நிதி: பரபரப்பு ஆவணம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Congress, rajiv gandhi, rajiv, Rajiv Gandhi Institute, central ministries, PSU, Public Sector Undertakings, Bharatiya Janata Party, bjp, PM National Relief Fund, Rajiv Gandhi institute for Contemporary Studies, BJP chief JP Nadda, ராஜிவ், ராஜிவ்காந்தி, மத்திய அமைச்சகங்கள், துறைகள், நிதி,  ஆவணங்கள்

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியதாக பா.ஜ., தலைவர் நட்டா குற்றம்சாட்டிய நிலையில், அதேகாலகட்டத்தில், ராஜிவ் சமகால கல்வி மையத்திற்கு, 7 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 11 பொதுத்துறை நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு கிடைத்த ஆவணங்களில், மனித வளத்துறை, உள்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.


latest tamil news
அதேபோல் எல்ஐசி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(எஸ்ஏஐஎல்), கெயில் இந்தியா நிறுவனம், ஓஐஎல்( ஆயில் இந்தியா லிமிடெட்), ஓரியன்டல் வங்கி, எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, ஹவுசிங் மற்றும் அர்பன் டெவலப்மென்ட் கார்பரேசன் கழகம்(ஹட்கோ), ஓஎன்ஜிசி உள்ளிட்ட 11 பொதுத்துறை நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி மறுக்காத நிலையில், எவ்வளவு பணம், ராஜிவ் சமகால கல்வி மையத்திற்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பிட்ரா கூறுகையில், ராஜிவ் சமகால மையத்திற்கு திருப்பிவிடப்பட்ட நிதி குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. 3 வருடங்களாக ஆடிட்டர் மாற்றப்படாதது ஏன்? அந்த மையத்தின் ஆடிட்டராக இருந்த ரமேஷ் தாகூருக்கு காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியதுடன், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் ம.பி., மாநிலங்களின் கவர்னராக நியமித்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை உள்ளிட்ட பல அமைச்சக பொறுப்புகளும் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தெளிவாக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது. பிரதமர் தேசிய நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா, ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான். எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன என தெரிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202004:20:13 IST Report Abuse
J.V. Iyer இது அராஜகம், அக்கிரமம். அரசாங்க சொத்தை இப்படி கொள்ளை அடிப்பதா? இப்போதாவது அதை தட்டி கேட்கவேண்டாம்? உச்ச நீதிமன்றம் தூங்கிக்கொண்டு இருக்கிறதா? இவ்வளவு மோசமான கட்சியா காங்கிரஸ்? அம்மம்மா
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202000:40:18 IST Report Abuse
தல புராணம் பிரதமரின் பெயரில் நிதி நிறுவன மோசடி பண்றது மோடி ஃபண்டா, இல்லை ராஜீவ் ஃபண்டான்னு விவாதம் பண்ணலாமா?
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
27-ஜூன்-202009:20:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுYou AH, don't even know the difference between f a PM fund and donating public money to a private organisation which is owned by a family?...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202000:35:23 IST Report Abuse
தல புராணம் ராஜீவ் அறக்கட்டளையினர் அவைகளை மறைக்கவில்லை, இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார்கள்.. PM CARES தனது வசூல் விவரங்களை இப்படி தொகுத்து அளிப்பார்களா ? அந்த அறம் இருக்கா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X