கொரோனா காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாஸ்க்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Japanese, startup, creates, connected face masks, japan, face mask, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, n-95 mask,

டோக்கியோ : கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் மாஸ்க் அணிகின்றனர். மாஸ்குகளில் பலவகைகள் வந்துவிட்டன. துணியாலான மாஸ்குகள், என்-95 மாஸ்குகள் என பலவகை மாஸ்க்குகள் புழக்கத்தில் உள்ளன. மாஸ்க் தயாரிப்பில் பலவித புதுமைகளை ஜப்பானியர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது மாஸ்க்குகள் தயாரிப்பில் லீவைஸ், ராங்லர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பெரிய நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள்வரை கொரோனா மாஸ்க் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. பெரும்பாலானவர்கள் துணியாலான மாஸ்கையே பயன்படுத்தி வருகின்றனர்.


latest tamil news


இதனைத்தொடர்ந்து தற்போது ஜப்பானிய நிறுவனமான டோனட் ரோபோடிக்ஸ், மாஸ்க் தயாரிப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள மாஸ்கின் பெயர் 'ஸ்மார்ட் மாஸ்க்' இந்த ஸ்மார்ட் மாஸ்க்குகள் மொழிமாற்றம் செய்ய பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய மொழியில் இருந்து 8 மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்ய இந்த மாஸ்க் பயன்படுகிறது. இதற்காகவே இதில் சிறப்பு மொழி மாற்றும் கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளதுபோல இந்த மாஸ்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுடன் ப்ளூடூத் மூலம் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. அவ்வாறு தொடர்பு கொள்வதால் இந்த மாஸ்க்குகள் பலவிதங்களில் பயன்படுகிறது. வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப இந்த மாஸ்க்குகளை அணிந்துகொண்டு பேசினாலே போதுமானது. நமது பேச்சை அப்படியே மெசேஜில் டைப் செய்துவிடும்.


latest tamil news


மேலும் ஜப்பானிய மொழி மட்டுமல்லாமல் 8 இதர மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யும் வாய்ஸ் ரெகக்னிஷன் தொழிநுட்பம் இந்த மாஸ்கில் உள்ளது. இந்த மாஸ்க்குகளை அணிந்துகொண்டு வயர்லெஸ் இயர் போன்களில் பேசுவதுபோல செல்போனை காதில் வைக்காமலேயே பேசலாம். பாடல்கள் கேட்கலாம். கிட்டத்தட்ட ப்ளூடூத் ஹெட்செட் போல இந்த மாஸ்க்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனாவை முன்னிட்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாஸ்கை வாங்க ஜப்பானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா தாக்கம் உலக அளவில் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் மாஸ்க்குகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்திய இந்த ஜப்பானிய நிறுவனத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202006:18:27 IST Report Abuse
தல புராணம் அடுத்து ஹெட் போனையும் இணைத்து, வைசரில் மின்னணு திரையை (projection screen visor) சேர்த்து விட்டால் கண், காது, மூக்கு, வாய்ன்னு சகலமும் மூடிடலாம்..அப்படியே ரோடு பாக்காமே அலைய வேண்டியது தான்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-202006:14:34 IST Report Abuse
தல புராணம் "Mask" has entered the world of electronic Wearable - முகக்கவசம், வாட்ச் போல "அணியும் மின்னணு" பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X