பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது: பால் முகவர்கள் சங்கம் அதிரடி

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை: நாளை(ஜூன் 27) முதல் போலீசாரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவது இல்லை என பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள், பால் விநியோகம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு நடுவிலும், மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக்
dairy, milk, police house, பால், போலீஸ், POLICE, TAMIL NADU, TN NEWS, Dairy agents association, HOUSE, milk delivery, DAIRY PRODUCTS

சென்னை: நாளை(ஜூன் 27) முதல் போலீசாரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவது இல்லை என பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள், பால் விநியோகம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலுக்கு நடுவிலும், மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில், தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பால் விநியோகிக்க தடை இல்லை என அரசு அறிவிப்பு வெளியிட்டும், வாகன பறிமுதல், பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர்.


latest tamil newsஇதுதொடர்பாக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே நாளை முதல் போலீசாரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவது இல்லை என தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து போலீசாரின் வீடுகளுக்கும் பால் விநியோகிக்கப்போவது இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
29-ஜூன்-202010:44:15 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஆ ஊன்னா ஒருத்தன் சங்கம் என்கிறான். அவனுக்கு யார் இந்த பவரைக் கொடுத்தது? பால் காரர்களைக் கேட்போம் எத்தனை பேர் போலீசாருக்கு பால் ஊற்றமுடியாது என்று சொல்கிறார்கள் பார்ப்போம்? இந்தமாதிரி ஒரு சங்க செய்தி என்ற பெயரில் வரும் தகவல்களை வெளியிடாதீர்கள் ப்ளீஸ்.
Rate this:
Cancel
K V RAO - PUDUVAI,இந்தியா
28-ஜூன்-202018:16:34 IST Report Abuse
K V RAO இது தனிப்பட்டவர்கள் எடுத்தமுடிவு. அவன் பொருள் அவன் உரிமை . அரசாஙக பால் நிறுவனங்கள் அவ்வாறு முடிவு பண்ண முடியாது.
Rate this:
Cancel
Murugan - Bandar Seri Begawan,புருனே
28-ஜூன்-202004:18:22 IST Report Abuse
Murugan அப்போ.. பால் முகவர்கள் வீடுகளில் குற்றம் நடந்தால் போலீஸ் தலையிடாது.. பரவாயில்லையா..
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூன்-202008:35:42 IST Report Abuse
Sivramkrishnan GkYou still believe on our police....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X