பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனை நிறுத்தம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையை ஐதராபாத் மற்றும் சுற்றிய பகுதிகளில் தற்காலிகமாக 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் முதலில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதன்மூலமாகவே நோய்

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையை ஐதராபாத் மற்றும் சுற்றிய பகுதிகளில் தற்காலிகமாக 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் முதலில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதன்மூலமாகவே நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் தற்போது மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, பரிசோதனைகருவிகள், மற்றும் நோயின் தன்மை அறியாமை போன்ற பல காரணங்களால் நாட்டின் பல மாநிலங்களிலும் குறைந்த அளவிலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது.
தெலுங்கானாவில் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆயினும் தற்போது கடந்த சில நாட்களாக ஒரே நாளில் தொற்று அதிகரித்து வருகிறது.


latest tamil newsதெலுங்கானாவில் குறைந்த அளவிலான பரிசோதனையே நடத்தப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 300 க்கும் குறைவாக பரிசோதனை நடத்தப்படுவதாக உயர்நீதிமன்றம் உட்பட பல தரப்புகளும் கண்டனம் தெரிவித்தது. பரிசோதனைகளை அதிகப்படுத்த கோரிக்கை விடுத்தன. தெலுங்கானா கடந்த ஒரு வாரமாக சராசரியாக 2,500 - 3,000 கொரோனா சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் ஐதராபாத் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தற்காலிகமாக 2 நாட்களுக்கு பரிசோதனையை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள 10 அரசு மற்றும் 18 தனியார் ஆய்வகங்கள் ஆகியவற்றில் வரும் மாதிரிகளின் பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. நேற்றுக்குள், 8,235 மாதிரிகள் இன்னும் ஆய்வகங்களில் நிலுவையில் உள்ளன, மேலும் நிலுவையில் உள்ளவற்றை சோதிக்காமல் கூடுதல் மாதிரிகள் சேகரிப்பது சிக்கல்களை உருவாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil newsநேற்று ஒரே நாளில், 3,616 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மொத்தமாக மாநிலத்தில் 70,934 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் ஜி.சீனிவாச ராவ் கூறுகையில், சிறப்பு முகாம்களை நடத்துவதன் மூலம் மாதிரிகள் சேகரிப்பது இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது,
இதனால் நிலுவையில் உள்ள மாதிரிகள் சோதனை முடிவடைந்து ஆய்வகங்கள் மற்றும் சேகரிப்பு மையங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. ஆய்வகங்களில் கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதிரியையும் 48 மணிநேரத்திற்குள் சோதிக்க வேண்டும். அதுவரை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். மாதிரிகளை சேகரிப்பதில், தாமதம் இருந்தால், முடிவு தவறாககூடும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
27-ஜூன்-202000:32:50 IST Report Abuse
Amal Anandan இவருதான் சிறந்த முதல்வர்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் சிலர் கம்பு சுத்தினர்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
26-ஜூன்-202021:02:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி டாமினோஸ் வரிசையில் ஒரு கட்டை. மொதல்லே பரிசோதனை கிட் இல்லைன்னு பரிசோதனை பண்ணல்லை. இப்போ, பரிசோதனை சாம்பிளை சோதனை பண்ண வசதியில்லை. டாமினோஸ் வரிசையில் இன்னொரு கட்டை. இதனால் நோய் யாருக்கு, யாருக்கு பரவுதுன்னு தெரியாது. ஆனா திருப்பதி கோவிலுக்கு 3000 பேர் அதிகம் அனுமதின்னு பக்கத்து மாநிலம் கூப்பிடுறான். தொழில்துறையில் பயங்கர முன்னேற்றம்ன்னு அரசு விளம்பரம் போல ரெண்டுநாள் முன் ஒரு செய்தி.
Rate this:
Cancel
26-ஜூன்-202020:33:16 IST Report Abuse
ஆப்பு அப்போ தொற்று எண்ணிக்கை கட்டாயம் குறைஞ்சிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X