சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிராக குரல் எழுப்புங்கள்: தவான் டுவீட்| Shikhar Dhawan raises voice against custodial death of father, son | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிராக குரல் எழுப்புங்கள்: தவான் டுவீட்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (19)
Share
Shikhar Dhawan, Dhawan, Justice For Jeyaraj And Fenix, custodial death, cricketer, sports, father, son, death, murder, culprit, police, tn news, tamil nadu, tuticorin, Thoothukudi,  தவான்

சென்னை: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்துக்கு அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் குரல் கொடுத்துள்ளார்.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட இருவரும், மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சுக்கு நடந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X