ஒபாமா கேர் திட்டத்தை முடக்க டிரம்ப் அரசு முயற்சி; ஜனநாயகக் கட்சி கொதிப்பு| Trump administration asks supreme court to axe Obamacare | Dinamalar

'ஒபாமா கேர்' திட்டத்தை முடக்க டிரம்ப் அரசு முயற்சி; ஜனநாயகக் கட்சி கொதிப்பு

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (6)
Share
வாஷிங்டன் : ஒபாமா கேர் என சுருக்கமாக அழைக்கப்படும் அஃபெர்டபிள் கேர் ஏக்ட் (ஐ.சி.ஏ), அமெரிக்க காப்பீட்டு திட்டம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் துவங்கப்பட்டது. இதனை அமெரிக்காவின் நூற்று பதினோராவது காங்., உறுப்பினர்கள் அங்கீகரித்தனர். ஏழை எளியோருக்கு உதவும் நோக்கில் இலவச மருத்துவ காப்பீட்டை இந்த மசோதா செய்து கொடுக்கிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தில் இணையும்
Obamacare, Donald Trump, Obama, Trump, Barack Obama, US, America, US president, Affordable Care Act, ACA, supreme court, US President Obama, ஒபாமா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்,பராக் ஒபாமா

வாஷிங்டன் : ஒபாமா கேர் என சுருக்கமாக அழைக்கப்படும் அஃபெர்டபிள் கேர் ஏக்ட் (ஐ.சி.ஏ), அமெரிக்க காப்பீட்டு திட்டம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் துவங்கப்பட்டது. இதனை அமெரிக்காவின் நூற்று பதினோராவது காங்., உறுப்பினர்கள் அங்கீகரித்தனர். ஏழை எளியோருக்கு உதவும் நோக்கில் இலவச மருத்துவ காப்பீட்டை இந்த மசோதா செய்து கொடுக்கிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தில் இணையும் அடித்தட்டு மக்களுக்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்துகொள்ள சலுகைகள் உண்டு. இதனால் லட்சக்கணக்கான வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அமெரிக்கர்கள் பயன் அடைந்தனர். ஜனநாயக கட்சியின் மிகப்பெரிய மக்கள் நலன் திட்டங்களில் ஒன்றாக ஒபாமா கேர் பார்க்கப்படுகிறது.

ஒபாமா கேர் திட்டத்தினால் பயனடைந்த பல அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சியின் வாக்காளர்களாக மாறி பின்னர் ஆதரவாளர்களாக மாறியது வரலாறு. தற்போது டிரம்ப் அரசு இந்த திட்டத்தை முடக்க திட்டமிட்டு வருகிறது.தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றத்தை டிரம்ப் அரசு நாடியுள்ளது.

மார்ச் 23, 2010 அன்று ஒபாமா கேர் மசோதா ஜனநாயக கட்சியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட இரண்டரை கோடி அமெரிக்கர்கள் ஒபாமா கேர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெற்றனர்.

டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டத்தை முடக்கவும் அந்த மசோதாவை நீக்கவும் குடியரசு கட்சி அரும்பாடுபட்டது. ஒபாமா கேர் காப்பீட்டுத்திட்டம் பிற மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பாதிப்பதாக குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் நாட்டின் மொத்த கொள்முதல் உற்பத்தி பாதிப்படைவதாக அவர்கள் அமெரிக்க காங்கிரஸிடம் குற்றஞ்சாட்டினர். இதுபோல தொடர்ந்து ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்தை நீக்க டிரம்ப் அரசு முயற்சி செய்து வந்தது. ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நன்ஸி பெலோசி டிரம்பின் இச்செயலை கடுமையாக விமர்சித்தார். டிரம்ப், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசியல் செய்கிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.


latest tamil news


தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சி சார்பில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை படுமோசமாக பாதித்துள்ள இந்த வேளையில் டிரம்ப் தன் சுயலாபத்துக்காகவும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் மட்டமான அரசியல் செய்கிறார் என தொடர்ந்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

'ஒபாமா கேர் திட்டம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இதனை இதனை நீக்கி தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தர முயன்று வருகிறார் டிரம்ப். மக்கள் நலனை காட்டிலும் தேர்தல் வெற்றியை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு ஜனநாயக கட்சி கொண்டுவந்த நல்ல திட்டங்களை நீக்குவது பழிவாங்கும் செயல்' என ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒபாமா கேர் திட்டம் குறித்து அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் இடையே நிறைய மாற்றுக் கருத்துக்கள் உள்ள நிலையில் இது அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்குமா என நீண்ட விவாதம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் போலவே ஒபாமா கேர் காப்பீடும் நாள்பட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்கு காப்பீடு வழங்க மறுக்கிறது எனவே ஒபாமா கேர் திட்டத்துக்கும் மற்ற மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என வாதிடுகின்றனர் குடியரசு கட்சி அமைச்சர்கள்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X